செய்திகள்

வடக்கில் காணி அளவீடு செய்வதை நிறுத்த கோரிக்கை

கடற்படைமுகாம் மற்றும் இராணுவ முகாம் அமைப்பதற்கு தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணியினை மேற்கொள்ள கூடாது என கோரி நில அளவை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.திருநெல்வேலியில் உள்ள நிலஅளவை அலுவலகம் முன்பாக இன்று காலை 8.30 மணி முதல் குறித்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டன.

இந்த போராட்டத்தின் போது நில அளவை அதிகாரிகள், இந்த நில அளவையை முற்றாக நிறுத்தும் அதிகாரம் எமக்கு இல்லை என போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால் இன்றைய தினம் உங்கள் போராட்டம் காரணமாக மேற்கொள்ளவிருந்த நில அளவை நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோமே தவிர முற்றாக நிறுத்தவில்லை.

முற்றும் முழுதாக நிறுத்தும் அதிகாரமும் எமக்கு இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட செயலகத்திற்கு சென்று மகஜர் ஒன்றும் யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தனர்.

இதில் தழிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

n10