செய்திகள்

வடக்கில் தமிழர்கள் மீட்டெழுவதற்கு அரசு இணங்கிகொள்ள மறுக்கின்றமை அடிமைபடுத்தும் செயலாகும் : சாள்ஸ் எம்.பி

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீட்டெழுவதற்கு  கூட பொறுத்து கொள்ள இந்த  நலடலாட்சி அரசு இணங்கிகொள்ள மறுக்கின்றமை தொடர்ந்து தமிழர்களை அடிமைபடுத்தும் செயலகவே கருததோன்றுகிறது என வன்னி நாடாளுமன்ற  உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டியாட்டியுள்ளார்

முல்லைத்தீவு பகுதியில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக ஆராய்வதற்கு சென்றிருந்த கிராமசேவகர்கள் றேற்று ஞாயிற்றுகிழமை தாக்கப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கiகியில் வெளியிட்டுள்ளார் 

குறித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி சிறப்பாக நடைபெறுவதாக கூறிவரும் அரசு தொடர்ந்து வடபகுதி மக்களின் வாழ்வதாதராத்தை நசுக்கிவருகிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எவ்வகையான முயற்சிகளையும் எடுத்தாலும் அதணை மேற்கொண்டு செல்வதில் பல முட்டுகட்டைகளை இந்த நல்லாட்சி அரசு ஏற்படுத்தி வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் மீட்டெழுவதற்கு  கூட பொறுத்து கொள்ள இந்த  நலடலாட்சி அரசு இணங்கிகொள்ள மறுக்கின்றமை தொடர்ந்து தமிழர்களை அடிமைபடுத்தும் செயலகவே கருததோன்றுகிறது.

குறிப்பாக நேற்று ஞாயிற்றுகிழமை(10)  முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கு தொடுவாய் என்ற பிரதேசத்தில் புதிதாக தென்பகுதி மீனவர்கள் 20 பேர் வருகைதந்துள்ளதை அறிந்த கிராமசேவகர் யேசுரெட்ணம்  குறித்த பகுதியில் சக கிராம சேவகர்களுடன் சென்றபோது தென்பகுதி மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டு இராணுவத்திற்கு தகவல் அனுப்பப்பட்டநிலையில் 593  இராணுவ படைப்பிரிவில் இருந்து வந்திருந்த இராணுவ கேணல் சமந்த சில்வா என்ற இராணுவ அதிகாரியால் கிராமசேவகர்களின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டு  தாக்கப்பட்டுள்ளார்கள். 

இதணை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.அண்மையில் முல்லைத்திவு வந்திருந்த மத்திய கடற்றாழில் அமைச்சர் தென்பகுதி மீனவர்களின் வருகைகை கட்டுபடுத்தவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று புதிதாக 20 தென்பகுதி மீனவர்கள் முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் பகுதிக்குவந்திருப்பதாக அறிந்த கிராமசேவகர்கள் இது தொடர்பாக ஆராய சென்றபோது இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர். இது எமக்கு அதிர்ச்சியழிக்கின்றது.

இப்படியான சம்பவங்கள் எமது வட பகுதியில் தொடர்ந்து நடைபெற்;றுக்கொண்டிருக்கின்றது இது வருந்ததக்க விடயம்,  தமது கடமையின் நிமித்தம்சென்ற  கிராம சேவகருக்கே வட பகுதியில் இவ்வாறான நிலையென்றால் சாதாரன பாமர மக்களின் நிலை என்ன?

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமபுறங்களில் இருக்கின்ற மக்கள் இராணுவத்தினரால் மிக பெரிய துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே குறித்த விடயங்கள் தொடர்பாக வன்னி பிராந்ரிய பொலிஸ்மாதிபருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றேன் இது தொடர்பாக உரியமுறையில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளோன். 

எனவே குறிப்பாக கிராமசேவகர்களை தாக்கிய குறித்த இராணுவ அதிகாரியை நீதிமன்றத்தில் முற்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளளேன், பொலிஸ்மாதிபர் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக   உறுதியளித்துள்ளார்.

  ஆனாலும் இக்கோரிக்கை தொடர்பில் எனக்கு நம்பிக்கையில்லை. கடந்த ஏழாம் திகதிதான் இலங்கையிலுள்ள அனைத்து கிhமசேவகர்களுக்கும் சமாதான நீதவான் வழங்கப்பட்டது. ஆனால் முல்லைத்தீவு கிராமசேவகர்களுக்கு சமாதான நீதவான் வழங்கப்பட்ட மூன்று தினத்திலேயே    இராணுவம் மிக கடுமையாக தாக்கியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் எந்த நாட்டில் அல்லது எந்த பிரதேசத்தில் நடக்கிறது என்று தெரியவில்லை, எனவே இதுதான் இந்த அரசாங்கத்தின் நல்லாட்சியா? என ஜனாதிபதியிடம் நான் நேரடியாகக்கேட்டுக்கொள்கிறேன்.

எனவே இப்படியான சம்பவங்கள் இனிவருங்காலங்களில் நடக்கக்கூடாது என நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுகின்றேன் என்றார். 

n10