செய்திகள்

வடக்கில் பெண்கள் மட்டும் பயணிக்கும் பேருந்து சேவைகளை ஆரம்பிக்கக் கோரிக்கை

வடபகுதியில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பேருந்து சேவைகளை நடத்த வேண்டுமெனப் பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச தனியார் பேருந்துகளில் பெருமளவில் பெண்களே பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களுடன் பயணம் செய்யும் ஒருசில ஆண்களின் பாலியல் சேஷ்டைகளுக்கு ஆளாகும் பெண்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இத்தகைய நெருக்கடிகளுக்கு உள்ளாகாமல் இயல்பு நிலையில் பயணம் செய்வதற்கு வசதியாக மகளிர்மட்டும் பயணம் செய்யும் சேவைகளை நடாத்த வேண்டும்.குறைந்தபட்சம் பாடசாலைகள்,அலுவலகங்களில் ஆரம்ப நேரம் மற்றும் முடிவடையும் நேரங்களிலாவது பிரதான வழிப் பாதைகளில் மகளிர் மட்டும் பயணம் செய்யும் பேருந்து சேவைகளை நடாத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் கொடூரங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான தேவையற்ற செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகர் நிருபர்-