செய்திகள்

வடக்குமாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட ஆறு பேருக்கு எதிர்வரும் 27 இல் இடமாற்றம்

வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட ஆறு பேருக்கு ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட இடம்மாற்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடம்மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஆளுநர் பளிகக்காரவின் உத்தரவுக்கமைய இடமாற்றங்கள் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி வடக்கு மாகாணச் சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய இ.ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும், மீன்பிடி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய இ.வரதீஸ்வரன் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராகவும், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய சி.திருவாரகன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் ஏப்ரல்-27 ஆம் திகதி முதல் இடம்மாற்றம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகர் நிருபர்-