செய்திகள்

வடக்கு கிழக்கில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவு நாள்

வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும் பொருட்படுத்தாது இன்று மாலை தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

வீதிகளிலும், மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு, கண்ணீரால் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஒன்றுகூடி மாவீரர் தினத்தை அனுஷ்டித்திருந்தனர்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை ஒரு மாவீரரின் தாய் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

-(3)