செய்திகள்
வடக்கு, கிழக்கில் கரிநாள்: யாழ். மாணவர்கள் பேரணி!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அறிவித்துள்ள யாழ். பல்லைக்கழக மாணவர்கள் இன்று பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, மாணவர்களால் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பேரணியில், பல்கலைகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் , சிவில் சமூக பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
”எழுவோம் எழுவோம் தமிழராய் எழுவோம்” என்று கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் பேரணியில் சென்றனர்.