செய்திகள்

வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடாதே’, ‘சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறியவர்களை பாதுகாக்கலாமா?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கறுப்பு துணியால் வாயை கட்டி வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கு, கிழக்கு மாகணங்களிலுள்ள சட்டத்தரணிகள் பலர் வாகனங்களின் மூலம் முல்லைத்தீவுக்கு சென்றிருந்தனர்.இதன்போது பெளத்த மேலாதிக்கமே இலங்கையில் மேலோங்கிக் காணப்படுவதாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தினர்.மேலும் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள் மற்றும் அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்தவேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.குறித்த ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது(15)Protest-2-5-720x405