செய்திகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்று போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கிளிநொச்சி இடம்பெற்ற போராட்டத்தில் 500இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.இதேவேளை, கிளிநொச்சியில் இன்றைய திடம் இடம்பெற்ற போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பேரணியாக ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.இதன்போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மைக்கேல் பச்லெட் ஜெரியாவிற்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த பேரணி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.(15)1 2 3