செய்திகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய அனுமதிக்கப்போவதில்லை: அமைச்சர் றிசாட் உறுதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துமாறு, வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதின் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தான் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் இந்த யோசனைக்கு இணங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா – நெலுங்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ரிஷாட் பதியூதின் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தனது கட்சியின் மூன்று உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
R-06