செய்திகள்

வடக்கு மக்கள் அப்பாவியானவர்கள் அவர்கள் அமைதியையே விரும்புகின்றனர் : வடக்கு ஆளுனர்

வடக்கில் வாழும் 90 வீதமான தமிழ் மக்கள் அப்பாவியானவா்கள்  அவா்கள் தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு அமைதியாகவே வாழவே விரும்புகின்றாா்கள்.  ஆனால் தெற்கில் இருந்து கொண்டு இனவாத கருத்துக்களை பரப்பி மேலும் ஒரு மோதலை ஏற்படுத்தி இன நல்லுரவை கெடுக்க முயற்சிக்கின்றனா். என  வடக்கின் ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

நேற்று சாவக்கச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கிகள், மற்றும் வெடி பொருட்கள் போன்று ஏற்கனவே 25 முறை பல்வேறு இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று எதிா்காலத்திலும் கண்டு பிடிக்கப்படும் ஏற்கனவே 3 தசாப்தங்களாக யுத்தம் நடைபெற்ற ஒரு  பிரதேசத்தில் இவ்வாறான பொருட்கள் இருக்கும்.  கைவிடப்பட்ட  வெடிகுண்கள் இன்னும் நிலங்களில் பாழ் வீடுகளில் தேங்கி கிடக்கும். என சற்று முன் வடக்கின் முப்படைத் தளபதி தண்னிடம்  தொலைபேசியில் இதனைத் தெரிவித்தாா். இதனை வைத்து சிலா் மீண்டும் வடக்கில்  யுத்தம் ஆரம்பம், என்று தெற்கில்  கட்டுக் கதைகள் சொல்லுகின்றனா். எனவும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று(31) பத்தரமுல்லையில் உளள் வடக்கு ஆளுணா்  கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போதே வடக்கு ஆளுணா் ரெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

அவா் அங்கு மேலும் தெரிவித்தாவது,

தற்போது வடக்கில் வாழம் மக்களுக்கு தேவைப்படுவதெல்லாம்  அமைதியான வாழ்க்கை. படையினா் யுத்த காலத்தில் தமிழ் மக்களது காணிகளை யுத்த நடவடிக்கைக்காக பிடித்தனா். அவைகள் கட்டாயம் அம் மக்களிடம் மீளக் கையளிக்கப்படல்  வேண்டும்.   அதே போன்று விடுதலைப்புலிகள் தமிழ் முஸ்லீம் மக்களது காணிகளை பலவந்தமாக விடுதலைப்புலிகள் குடும்பத்தினருக்கு பகிா்ந்தளித்துள்ளனா். சில காணி நிலங்கள் சொந்தக் காரா்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் அதனை சிலா் பலவந்தமாக பிடித்து அதில் வாழ்கின்றனா். இடம் பெயா்ந்த சில மக்கள் மீண்டும் இங்கு வராது அவா்கள்வாழும் பிரதேசத்திலேயே வாழ விரும்புகின்றனா். அவா்கள் வாழும் பிரதேசத்தில் காணிகள் வீடுகள் கேட்கின்றனா். அதன்படி நாம் செயற்படுவோம்.