செய்திகள்

வடக்கு மாகாணத்தின் சுதேச மருத்துவ துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய பாரம்பரிய மருத்து ஆராய்ச்சி நிலையத்துடன் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் சுதேச மருத்துவ துறையை அபிவிரத்தி செய்யும் நோக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் இந்த குழு அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ளது. இந்த விஜயத்தின் போது தமிழ்நாடு சென்னையை தளமாக கொண்டு இயங்கும் பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த வைத்திய நிபுணர்கள் வடக்கு மாகாண சுதேச மருத்துவர்களையும், அமைச்சின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது கிளிநொச்சி, கல்மடுநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மூலிகைத்தோட்டத்தின் அபிவிருத்தி, உள்ளுரில் சித்தமருத்துவ மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைத்தல், மூலிகை தோட்ட செய்கையில் விவசாயிகளை ஈடுபடுத்துதல், உற்பத்தி செய்யப்படும் மருந்துப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

3 (1) 1

N5