செய்திகள்

24ம் திகதிக்குள் பாராளுமன்றம் கலையும்?

எதிர்வரும் 24ம் திகதிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திகதிக்குள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சிறுபான்மை கட்சியினர் 20வது திருத்தம் தொடர்பான தமது யேயாசனைகளை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ள வேளையில் 20வது திருத்தம் நிறைவேற்றுவது சாத்தியமற்ற விடயமெனவும் 24ம் திகதிக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படுமெனவும் அவர் சிறுபான்மை கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.