செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்துவேட்டை ஆரம்பம்!

மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வட மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், கே.ஜெயதிலக்க, முசலி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம். எஹியான் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், இஸ்லாமிய மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்துகளையிட்டனர். சேகரிக்கப்படும் கையெழுத்துடனான கோரிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரிணல் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.