செய்திகள்

வடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்

வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் அமைய அடிப்படையில் பணியாற்றிய 61 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நிரந்தர நியமனம் பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றும் போது, அவரது அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைவு பற்றிய விபரங்களைப் பூரணமாகத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண விவசாயத் திணைக்களத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணியின் எண்ணிக்கை 510 ஆனால், 361 பேரே தற்போது சேவையில் உள்ளனர். இன்னும் 149 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கென அங்கீகரிக்கப்பட்ட ஆளணியின் எண்ணிக்கை 571. ஆனால் 315 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 256 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதேபோன்று, நீர்ப்பாசனத் திணைக்களத்தில் 124 வெற்றிடங்களும், கூட்டுறவு திணைக்களத்தில் 40 வெற்றிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளணிப்பற்றாக்குறைவு பற்றிய விபரங்களை வெளியிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன், ஆளணிப்பற்றாக்குறைவு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பாரிய தடையாக இருப்பதாகவும், இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை திணைக்களத் தலைவர்களும் அமைச்சின் செயலாளரும் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.00 01 02 03 04