செய்திகள்

வடபகுதி செல்வதற்கு வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் நீக்கம்

வெளிநாட்டவர்கள் வடபகுதிக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் இன்று நீக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற பாதுகாப்புக் கவுன்ஸிலின் முதலாவது கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டு இந்தத் தடையை நீக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இலங்கையில் பிறந்தவர்களாயினும் வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதியைப் பெற்ற பின்னரே வடபகுதி செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு முன்னைய மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் இந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தன. இந்த நிலையிலேயே தடை இன்று ஜனாதிபதியால் நீக்கப்பட்டுள்ளது.