செய்திகள்

வடமராட்சி உடுத்துறையில் பொலிசார் -பொதுமக்கள் முறுகல்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப்பகுதியில் சந்தேக நபர் ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர், இதனால் பொலிசார் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலிசார் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதில் உடுத்துறை வாசியான வேலன் சிவபாதசுந்தரம் (வயது-56 ) என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயம் அடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.

இரு குடும்பங்களுக்கிடையில் சண்டை நடைபெற்ற சண்டை காரணமாக ஒரு குடும்பம் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தது. இதன் அடிப்படையில், வீட்டாரை தேடி உடுப்பிட்டியில் உள்ள மற்றைய வீட்டை தேடி இன்று பொலிசார் சென்றபோது அவர்கள் தேடிவந்த நபர் வீட்டில் இருக்கவில்லை.இதனால், அவரது சகோதரனை கைது செய்ய முயன்றபோது ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பதிலுக்கு பொலிசார் துப்பக்கிசூட்டில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.