செய்திகள்

வடமாகாணக் கல்வியமைச்சின் ஏற்பாட்டில் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் உள்ளகப் பயிற்சியை முடித்து இறுதித் தேர்வில் சித்தியடைந்த ஆசிரியர்களையும், யாழ்.தேசியக் கல்வியியற் கல்லூரியில் கல்வியை நிறைவு செய்த ஆசிரியர்களை வடமாகாணக் கல்வியமைச்சினால் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும் நிகழ்வும், தற்காலிகக் கல்விசாரா ஊழியர்கள் 56 பேருக்கான நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வும் அண்மையில் யாழ்.கோப்பாய் தேசியக் கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது.

வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதம விருந்தினராகவும், வடமாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராசா சிறப்பு விருந்தினராகவும், வடமாகாண சபை உறுப்பினர்களும், கல்விக் குழு உறுப்பினர்களுமான இ.இந்திரராசா பா.கஜதீபன், இ.ஆர்னோல்ட் மற்றும் வே.சிவயோகன், அ.பரஞ்சோதி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டதுடன் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், வடமாகாணக் கல்வியமைச்சின் உயரதிகாரிகள் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

யாழ்.நகர் நிருபர்-

edu minstry north (1)

edu minstry north (2)

edu minstry north (3)

edu minstry north (4)