செய்திகள்

வடமாகாணத்தில் இருந்து மூட்டைகட்டி கொழும்பு திரும்பிய ஆளுநர்

வடக்கு மாகாணசபையின் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து மூட்டைகளை கட்டிக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளார்.

இனி புதிய ஆளுநர் ஒருவர் (சிவில் சேவையில் உள்ள) விரைவில் தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், புதிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஓரிரு வாரங்களில் வடமாகாண சபைக்கு புதிய ஆளுநரும் புதிய செயலாளரும் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.