செய்திகள்

வடமாகாணத்தில் கூட்டுறவுத்துறையை மேம்படுத்த நூறு நாள் வேலைத்திட்டம் ஆரம்பம்

வடக்கில் கூட்டுறவு அமைப்புக்களை வினைத்திறன் மிக்க அமைப்புக்களாக மாற்றியமைப்பதற்கான நூறுநாள் வேலைத்திட்டமொன்றை வடமாகாணக் கூட்டுறவு அமைச்சு ஆரம்பித்துள்ளது.இந்த நூறு நாள் திட்டத்தில் 23 வகையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்திச் சங்கங்களை வினைத்திறன் மிக்க அமைப்பாகக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாகக் கடந்த கால யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் வடக்கில் கூட்டுறவுத்துறை என்றுமில்லாத அளவுக்குப் பின்னோக்கிய நிலையில் காணப்படுகின்றன.சங்கங்கள் போதிய வியாபாரமின்றிப் பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.அண்மையில் கூட்டுறவாளர்களுக்குப் புதிதாக வெளியிடப்பட்ட முப்பது வீதச் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்தக் கூட நிதியின்றி அநேகமான சங்கங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.இந்த நிலையில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சு நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் சங்கங்களை அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கும்,வினைத்திறன் மிக்க சங்கங்களாக உயர்த்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்.நகர் நிருபர்-