செய்திகள்

வடமாகாணத்தில் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்கு இராணுவம் பயன்படுத்தப்படலாம்

வடமாகாணத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக இராணுவம் பயன்படுத்தப்படலாம் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்(சிஎம்ஈவி) அச்சம் வெளியிட்டுள்ளது
கடந்த மாகாணசபை தேர்தலின் போது வாக்காளர்கள் இராணுவத்தால் மிரட்டப்படுவது மிகவும் நுட்பமான முறையில் இடம்பெற்றது, என சிஎம் ஈவியின் ஏற்பாட்டாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்கள் இத்தகைய மிரட்டல்கள், அச்சுறுத்தல்களையும் மீறி வாக்களிப்பதற்கு தீர்மானித்தால், இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக தங்கள் கோபத்தை காண்பிப்பதற்காவே பெருமளவில் வாக்களிக்க முன்வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
தேர்தல் வன்முறைகள் மற்றும் விதிமுறைகள் மீறல்தொடர்பாக 420முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்க ஆதரவாளர்கள் பெருமளவு தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர், எனினும் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்காததால் அவர்களால் தப்ப முடிந்துள்ளது.
அரச வளங்களும் ஊடகங்களும் முன்னர் எப்போதும் இல்லாத வகையில்ஜனாதிபதியின் கட்சியினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன,
தண்டனையிலிருந்து விலக்களித்தல் காணப்படுகின்றது, குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
பொலிஸாரின் செயற்பாடின்மையே தேர்தல்வன்முறைகள் அதிகரிக்க காரணம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியை சேர்ந்த உள்ளுராட்சி உறுப்பினர்களே வன்முறைகளுக்கு அதிகம் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.