செய்திகள்

வடமாகாண எதிர்கட்சித் தலைவர் பதவி தவராஜாவிடமிருந்து பறிபோகும் நிலை

thavarajah_epdpஜனாதிபதித் தேர்தலையடுத்து இடம்பெறும் கட்சி மாறுதல்களையடுத்து வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் மாற்றம் ஏற்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த தவராஜாவின் இடத்துக்கு றிசாட் பதியுதீன் தலைமையிலான சிறிலங்கா மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகின்றது.

வடமாகாண சபை எதிர்க்கட்சி வரிசையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த இருவரும், ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த இருவரும் உள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த 3 பேர் உள்ளனர்.

இதனால், எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தமக்குத் தரப்பட வேண்டும் என மக்கள் காங்கிரஸ் வலியுறுத்திவருகின்றது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தவராஜா இழக்கலாம் எனத் தெரியவருகின்றது.