செய்திகள்

வடமாகாண சபையின் பிரதம செயலாளராக பத்திநாதனை நியமிக்க திட்டம்?

வடமாகாண சபையின் பிரதம செயலாளராகவுள்ள விஜயல‌ஷ்மி மாற்றப்பட்டு அவரது இடத்துக்கு மொராகலை  அதிபராகக் கடமையாற்றும் பத்திநாதன் நியமிக்கப்டலாம் என நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

வடமாகாண சபை முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட விஜயலக்‌ஷமியே வடமாகாண சபையின் பிரதம செயலாளராக தற்போது கடமையாற்றுகின்றார்.

விஜயலக்‌ஷியுடன் இணைந்து செயற்பட முடியாத நிலை காணப்படுவதாக முதலமைச்சர் பதலதடவை முன்னைய அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் அவரை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன், ஆளுநரை மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பதுடன், பிரதம செயலாளரையும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரியவந்திருக்கின்றது. அதன்படி மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபராக தற்போது பணியாற்றும் பத்திநாதன் வடமாகாண சபையின் பிரதம செயலாளராக நியமிக்கப்படலாம் எனத் தெரியவந்திருக்கின்றது.

மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்க அதிபராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ள பத்திநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராவார்.