செய்திகள்

வடமாகாண சபை தீர்மானம்! இலங்கை அரசு அதிருப்தி! முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு!!

இலங்கை தொடர்பான போர்க் குற்ற அறிக்கை மார்ச் மாத கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படுவதை ஒத்திவைக்கும் முயற்சியில் இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவரும் இலங்கை அரசாங்கத்துக்கு வடமாகாண சபை நேற்று நிறைவேற்றியிருக்கும் இனப்படுகொலை குறித்த தீர்மானம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது.

இதனையடுத்து கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட அவலசர உத்தரவையடுத்து வடமாகாண ஆளுநர் பாளிகார வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்திருப்பதாகத் தெரிகின்றது. நேற்றிரவே விக்கினேஸ்வரனை ஆளுநர் அழைத்திருந்தபோதிலும், இன்று காலையில் முதலமைச்சர் ஆளுனரைச் சந்திப்பார் எனத் தெரியவருகின்றது.