செய்திகள்

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில், 021-2217982 அல்லது 021-2226666 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை மேற்கொள்வதனூடாக பொதுமக்கள் இந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்கு தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் பெற்றுக் கொள்ள வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் செயற்படும் வண்ணம் உதவி அழைப்பு இலக்க சேவையானது இன்று முதல் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(15)