செய்திகள்

வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் நியமனத்தில் மாற்றமில்லை: முதலமைச்சர்

வடமாகாண சபையின் பிரதம செயலாளராக பத்திநாதனை நியமிப்பது என்ற அரசாங்கத்தின் முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பான நியமனக்கடிதம் பத்திநாதனுக்கு அனுப்பப்பட்டுள்ள அதேவேயைில், அது தொடர்பில் தனக்கும் தெரியப்படுததப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக அவர் பதவிப்பிரமாணம் செய்வார் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.