செய்திகள்

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 20000 ரூபா உதவி

ஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரத்ததை சேர்ந்த முத்துலிங்கம் கலைமதியின் மருத்துவ செலவுக்காக 20000 ரூபா வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் நேற்றைய தினம்(24.3.2016) வழங்கி வைக்கபட்டது.

இவரது கணவன் கடந்த கால யுத்தத்தின் போது தனது இடது கையினையும் இழந்து இரு கால்களும் எலும்பு முறிந்து மற்றும் நரம்பு அறுந்த நிலையில் சத்திர சகிச்சை செய்யப்பட்டு அவரால் சுயமாக இயங்க முடியாத நிலையில் பல இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றவேளை முத்துலிங்கம் கலைமதி அவரையும் இரு பிள்ளைகளையும் நாளந்தம் கூலி வேலை செய்து தமது குடும்பத்தை பார்த்து வந்த வேளையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீர் சுகயீனம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு மனைவியும் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே முத்துலிங்கம் கலைமதியின் மருத்துவ செலவுக்காக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 21.12.2015 அன்று ரூபா 30000 மருத்துவ செலவுக்ககா வழங்கிவைக்கபட்டது குறிப்பிடதக்கது.

n10