செய்திகள்

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல மண்டபத்தில் வைத்து நேற்று முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இவ் நிகழ்வு தொடர்பாக தெரியவருவதாவது முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தினால் அவர்களின் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளினை மேம்படுத்துவதற்காக கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இக் கோரிக்கையினை கவனத்தில் கொண்ட இந்து வாலிபர் சங்கம் ஒன்றிய் அங்கத்தவர்களினுடைய பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி  நேற்று முதற் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 40 பிள்ளைகளுக்கு புத்தக பைகள் மற்றும் அப்பியாச கொப்பிகளை வழங்கியிருந்தனர் இவ் நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட  அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.7b8f44d5-645f-4d72-9d90-0de567335cfe 56a27cf6-d330-4c07-a6c3-08f66631753e b34b2703-0182-4508-b22b-8ebd1276546a fadc0b33-9d74-4a46-8045-ff190f2c751c
n10