செய்திகள்

வட இலங்கைச் சங்கீத சபையின் சித்திரை மாதக் கலை நிகழ்வு மருதனார்மடத்தில் சிறப்பாக நடைபெற்றது

வட இலங்கைச் சங்கீத சபை நடாத்தும் மாதாந்தக் கலைநிகழ்வின் சித்திரை மாத நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணி முதல் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கைச் சங்கீத சபையின் தற்பரானந்தன் கலையரங்கில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலாவித்தகர் திருமதி ஜெ.சிவதர்சிகா குழுவினரின் இசை அரங்கு நிகழ்வும், வடமராட்சியைச் சேர்ந்த மூத்த சங்கீத வித்துவான் ஏ.கே.கருணாகரன் குழுவினரின் இசைக்கச்சேரி நிகழ்வும் இடம்பெற்றது.கருணாகரன் குழுவினரின் இசை நிகழ்வை அனைவரும் மெய்மறந்து கேட்டு இரசித்தனர்.அதனைத் தொடர்ந்து ‘தொண்டைமானாறு அபியநயசுரபி’ கலாமன்ற மாணவர்களின் நிருத்தியார்ப்பண நிகழ்வும் நடைபெற்றது.இதன் போது திருமதி .புனிதவதி சண்முகலிங்கத்தின் கதையமைப்பில் திருமதி.ஞானதர்ஷினி கிருபாகரனின் நெறியாழ்கை மற்றும் நட்டுவாங்கத்தில் உருவான ‘அகந்தையை அழித்த பிச்சாடனன்’ நாட்டிய நாடகமும் மேடையேற்றப்பட்டது.

இந் நிகழ்வில் கலைஞர்கள் பலர் பங்கேற்றிருந்தாலும் கூட இளைய தலைமுறையினரின் வரவு குறைவாகக் காணப்பட்டமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
-யாழ்.நகர் நிருபர்-

IMG_2544 IMG_2548 IMG_2551