செய்திகள்

வட , கிழக்கிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க ஐ.தே.க , ஸ்ரீ.ல.சு.க இடையே இணக்கப்பாடு வேண்டும்: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

வடக்கு , கிழக்கிற்கு நியாயமான வகையில் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு பிரதான இரண்டு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென பெருந்தோட்ட கைத்தெழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டி ஹாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலை விரைவில் எதிர்பார்க்கின்றோம். அந் தேர்தலின் பின்னர் அமையப்பெறும் தேசிய அரசாங்கத்தில் சகல கட்சிகளும் ஒரே நிலைப்பட்டிலேயே செயற்பட வேண்டும். அதனை விடுத்து  வெவ்வேறு   நிலைப்பாடுகளில் செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதுடன் அந்த பிரச்சினைகள் மேலும் விரிவடைந்து செல்லும்.
இந்த பிரச்சினைகளில் ஒன்றுதான் வடக்கு கிழக்கு பிரச்சினை. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது இதனால் அங்கு பிரச்சினைகள் முடிந்தவிட்டது என சிலர் கூறலாம். ஆனால் அங்கு பிரச்சினை முடியவில்லை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் இதன்படி அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு பிரதான இரண்டு கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் செயற்படவேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.