செய்திகள்

வட- கிழக்கில் ஆட்சி மற்றம் வேண்டும் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்

இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்பட வடக்கு கிழக்கில் ஆட்சி மாற்றம் தேவை என்று அமெரிக்க தூதரக அதிகாரிகாளிடம் தாங்கள் வலியுறுத்தி உள்ளதாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்

தலைவர் எ.சகாதேவன்தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே இதனை வலியுறுத்தியதாகவும் தம்மை தொடர்ந்துசந்திக்குமாறு தூதரக அதிகாரி வலியுருத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பலன்கள் இன்னும் தமிழ்மக்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலையே தற்போதும் நிலவுகிறது. தென்னிலங்கையில் ஏற்பட்ட அதிகார மாற்றத்தின் பலன்களை போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழ் சமூகமும் முழுமையாக அனுபவிப்பதற்கு வடக்கு கிழக்கில் ஆட்சி மாற்றம் ஒன்று மிகவும் அவசியமானதாகும். இது தொடர்பான அரசியல் சமூக விடயங்கள் பற்றி விரிவான கலந்துரையாடல் ஒன்று வடக்கு கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்திற்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம் பெற்றது. இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதரக அரசியல் பிரிவு அதிகாரியான ரமிஸ் ஹென்றி அவர்களும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத் தலைவர் எ.சகாதேவன் மற்றும் செயலாளர் செ. சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் போது
1.இறுதிப் போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் உட்பட 1983க்கு பிறகு சொத்துக்களை இழந்த சகலருக்கும் முழுமையான இழப்பீடு வழங்கப்படுதல்.

2. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளுக்கு அமெரிக்க கோல் சென்ரர்களில் வேலை வாய்ப்புகள் வழங்க உதவுதல்.
3. வடமாகாண அபிவிருத்தி திட்டங்களில் அரசியல் ரீதியாக ஏற்படுத்த பட்டு வரும் தடைகள் குறிப்பாக இரணைமடு நீர் வினியோக திட்டத்திலும் மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் திட்டத்திலும் ஏற்படுத்தப்படும் தடைகள் நீக்கப்படுதல்.
4. யுத்தத்தால் ஆனாதைகள் ஆக்கப்பட்டோர் அங்கவீனர், விதைவைகள், ஆகியோருக்கு மறுவாழ்வு உதவிகள் பெற்றுத் தரப்படுதல்.
5. இந்தியாவிலும் சர்வதேசத்திலும் உள்;ரிலும் இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மறுவாழ்வு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படுதல்.
6. வடக்கு கிழக்கில் சுகாதாரம், போசாக்கு, கல்வி, போன்ற விடயங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுதல்;.
7. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதியில் சமீபகாலமாக இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை சிறுவர் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல்.
8. வடக்கு கிழக்கு மீனவர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்ஏற்றுமதி தடையால் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.
9. வடக்கு, கிழக்கு காணிப்பிரச்சினைகளுக்கு குறிப்பாக, வலிவடக்கு மற்றும் சம்பூர் விடயங்களுக்கு ஏற்படுத்தக்கூடிய தீர்வுகள்.
10. வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டு மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் மேம்பாடுகளை ஏற்படுத்துதல்.
11. புதிய தொழில் வாய்ப்புகளையும் நீடித்து நிற்கக் கூடிய கடற்தொழில் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களையும் ஏற்படுத்துதல்.
12. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது நலன்களை பெறுவதற்கு தடையாக நிர்வாக, அரசியல் மட்டங்களில் ஏற்பட்டுள்ள ஊழல் மற்றும் அதிகார து~;பிரயோகத்துக்கு முடிவு கட்டுதல்.
13. தடுப்புக் காவலில் உள்ளோர் அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் விடுதலை மற்றும் மறுவாழ்வு விடயங்களில் காட்டப்படும் உதாசினப் போக்கு.
14. அரசியல் மறு சீரமைப்பு
மிக மிக முக்கிய விடயமாக வடக்கு, கிழக்கில் அதிகார மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் நிலையான சமாதானம் சுதந்திரம் சகவாழ்வு என்பவற்றை தமிழ்மக்கள் அடைவதற்கு வடக்கு, கிழக்கு அதிகார மட்டங்களில் மாற்றம் தேவை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தோம்.
தேர்தல் நடைபெறும் காலங்களில் அமெரிக்க அரசாங்கத்தினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் பெயரினை பாவித்து இங்கு வடக்கு, கிழக்கு அரசியல் வாதிகள் தமிழ் மக்களின் வாக்குகளை தொடர்ந்து கவர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாமலிருக்க அமெரிக்க அரசாங்கம் கவனத்துடன் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம்.
தமிழ் மக்களுக்கு நீதியும் நீடித்த அமைதியும் கிடைக்க வேண்டுமென்பதில் அமெரிக்க அரசாங்கம் காட்டி வரும் அக்கறைக்கும் பற்றுறுதிக்கும் எமது தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டோம்.

சுமார் ஒன்றரை மணிநேரம் கொழும்பு சினமன் கிராண்ட் ஹொட்டேலில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமெரிக்க அதிகாரி ஆழ்ந்த கவனமெடுத்ததுடன் தொடர்ந்தும் தம்மை சந்திக்குமாறும் கருத்துகளை தொடர்ச்சியாக பரிமாறிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

எமது அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தான் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் அவர் எடுத்துக் கூறினார்.