செய்திகள்

வட மாகாண புதிய ஆளுநராக பள்ளிகக்கார நியமனம்

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ். பள்ளிகக்கார நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததுடன், வெளிநாட்டமைச்சின் செயலாளராகவும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாகவும் பணியாற்றி இருக்கிறார்.