செய்திகள்

வட மாகாணசபையின் வவுனியா மாவட்ட புதிய உறுப்பினருக்கு வரவேற்பு (படங்கள்)

வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள வவுனியா மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தும் எம்.பி. நடராஜாவை வரவேற்கும் நிகழ்வு இன்று (10.5) வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் போனஸ் ஆசன் உறுப்பினராக சுழற்சி முறையில் இரண்டாவது வருடத்திற்காக தெரிவு செயய்ப்பட்டுள்ள எம்.பி. நடராஜ், உட்பட அதிதிகள் மங்கள் இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு சிறப்பு உரைகள் இடம்பெற்றிருந்தது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், இந்திய துணைத்தூதுவர் ரி. மூர்த்தி, வட மாகாண சுகாதார அமைச்சர் பி. சத்தியலிங்கம், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலளார் சி. பாஸ்கரா, மாகாணசபை உறுப்பினர்களான இ. இந்திரராஜா, ஜி.ரி. லிங்கநாதன், எம். தியாகராசா, க. சிவனேசன், சி. சிவமோகன், சர்வேஸ்வரன், இ.தொ.க வன்னி அமைப்பாளர் கஸ். கோவிந்தராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், முன்னாள் உப நகரபிதா சந்திரகுலசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

DSC03680

DSC03698