செய்திகள்

வட மாகாண சபை தீர்மானம் வாக்குகளை இலக்காக கொண்டதே : அரசாங்கம்

வடமாகண சபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி தீர்வு யோசனை வாக்குகளை இலக்காக கொண்டதே எனவும் இது தொடர்பாக அரசாங்கத்திற்கு பிரச்சினை கிடையாது எனவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாராட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமஷ்டி என்ற வசனம் இன்று தமிழ் அரசியல்வாதிகளின் வார்த்தையான மாறியுள்ளது. டொனமூர் காலத்தில் சிங்களவர் அது தொடர்பான யோசனையை கொண்டு வந்த போது அதற்கு தமிழர் எதிர்த்தனர். ஆனால் இன்று அது மாறி நடக்கின்றது. இன்று வடக்கில் நிறைவேற்றப்பட்ட யோசனையானது வாக்குகளை இலக்காக கொண்டது. இதனால் அரசாங்கத்திற்கு எந்த பிர்ச்சினையும் கிடையாது  என அவர் தெரிவித்துள்ளார்.
n10