செய்திகள்

வட மாகாண சுகாதார திணைக்களத்தில் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம்

வட மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தில் பணியாற்றிய சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வட மாகாண சுகாதார சுதேசிய புனர்வாழ்வு சிறுவர் நன்நடத்தை மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 450 சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

DSC01049 DSC01095 DSC01115