செய்திகள்

வணிகவளாகங்களை தாக்கப்போவதாக அல்சபாப் எச்சரிக்கை

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள பாரிய வணிக வளாகங்கள் மீது சோமாலியாவின் அல் சபாப் அமைப்பு தாக்குதலை மேற்கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை இவ்வாறான வணிக வளாகங்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தங்களது பாதுகாப்பை பலப்படுத்தும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பிற்கான அமைச்சர் ஜெ ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அல்சகாப் வெளியிட்டுள்ள வீடியேரில் அமெரிக்காவின் மினஸ்சொட்டாவில் உள்ள வணிக வளாகம், அல்பேர்ட்டாவில் உள்ள வெஸ்ட்எட்மன்டன் வணிக வளாகம் மற்றும் லண்டனின் ஓக்ஸ்போர்ட் வீதியிலுள்ள வணிக வளாகம் ஆகியலற்றின் மீது தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பிட்ட வீடியோவில் காணப்பட்ட நபர் அமெரிக்கர்களுக்கும், ய+தர்களுக்கும், மேற்குலகிற்கும் சொந்தமான வணிக வளாகங்களை தாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பினர் குறிப்பிட்ட இலக்கை தாங்கள் தாக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை தீவிரமாக எடுக்கவேண்டும்,என உள்நாட்டு பாதுகாப்பிற்கான அமைச்சர் ஜெ ஜோன்சன் தெரிவித்துள்ளார்

கனடாவின் வணிக வளாகங்களை தாக்கப்போவதாக அல்ஹைடா சார்பு அல் சகாப் அமைப்பு விடுத்துள்ள எச்சரிகையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.
சோமலிய முஸ்லீம்கள் மற்றும் ஏனைய முஸ்லீம் மக்களுடன் இணைந்து வணிக வளாகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எட்மண்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை கனடா எந்த பயங்கரவாத அமைப்பின் மிரட்டல் காரணமாகவும் அச்சமடையாது என குறிப்பிட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பிற்கான அமைச்சர் அதன் காரணமாகவே கனடா விலகிநிற்காமல் ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அல்பேர்ட்டா பிரதமர் ஜிம் பிரென்டிஸ் மக்களை தமது நாளாந்த நடவடிக்கைகளை தொடருமாறு கேட்டுள்ளார்.
மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது
அவசியம், என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை அல்சபாப் அமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ள அல்பேர்ட்டாவின் வெஸ்ட் எட்மண்டன் வளாகம் பாதுகாப்பான பகுதியாக உள்ளதாக தலைமை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.