செய்திகள்

வதந்திகள் பரப்பியவர்களை தேடி சீ.ஐ.டி விசாரணை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலையில் நாட்டை முழுமையாக மூடுவதற்கு (லொக்டவுன்) செய்ய நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக பொய்யான வதந்திகளை பரப்பியவர்கள் தொடர்பாக சீ.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையை முற்றாக மூடுவதற்கும் உணவு விநியோகம் , சேவைகள் விநியோகம் என்பனவும் நிறுத்தப்படுமெனவும் வாகனங்கள் வெளியில் பயணிப்பதற்கும் தடை விதிக்கப்படுமெனவும் பொய்யான வதந்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில் இது தொடர்பாக சீ.ஐ.டியினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளனர். -(3)