செய்திகள்

வன்னியில் சூடு பிடிக்கும் தையல் இயந்திர விநியோகம்: தேர்தலில் அதரவு தேடும் றிசாட்டின் முயற்சி

பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் வன்னி தேர்தல் தொகுதியில் யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி வாக்கு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆதரவாளர்கள்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அமைச்சர் றிசாட்டுக்கான ஆதரவு வன்னித் தேர்தல் தொகுதியில் வெகுவாக குறைந்துள்ளது. இதனை நீக்கி வாக்குகளை பெறுவதற்காக பட்டதாரி ஒன்றியம் என்னும் அமைப்பை உருவாக்கி அவர்கள் மூலம் கிராமங்களில் உள்ள யுவதிகளுக்கு தையல் இயந்திரத்தை வழங்குவதுடன் அவர்கள் ஒவ்வொருவரையும் 20 வாக்குகளை பெற்றுத் தருமாறு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியாவின் பாவற்குளம், சூடுவெந்தபுலவு, தரணிக்குளம், நெடுங்கேணி, சிதம்பரபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் இவ் வேலைகள் இடம்பெற்றுள்ளன.