செய்திகள்

வன்னியில் வெட்டுக்கிளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க பணிப்புரை

வன்னி மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வந்த விவசாயச் செய்கைகள் வெட்டுக்கிளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மேற்கொண்டு வந்த விவசாய நடவடிக்கைகளில் வெட்டுக்கிளியின் தாக்கம் அதிகரித்த நிலை காணப்பட்டமையினால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததோடு, விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம், பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் வன்னி மாவட்டத்திலுள்ள பிரதேசச் செயலகங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும்இ பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பாகவே உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

N5