செய்திகள்

வன்னி படைத்தளத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் விஜயம்

வன்னி படைத்தளம் அமைந்துள்ள வவுனியாவிற்கு இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்ட அவர் இன்று பிற்பகல் வன்னி ஜோசப் விமானப்படை தளத்திற்கு விசேட உலங்கு வானூர்தி மூலம் சென்றடைந்தார்.

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொலிபஸ் பெரேராவினால் விமானப்படைத் தளத்தில் வைத்து வரவேற்றகப்பட்ட அவர் பின்னர் இராணுவ தலைமையகத்தில் கூட்டமொன்றையும் நடத்தினார்.

இதனையடுத்து வன்னி இராணுவத்தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உணவக கட்டிடமொன்றினையும் உத்தியோகபூர்வமாக அவர் திறந்து வைத்தார்.

 நாளை முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளார்.  இறுதி அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைதிரிபாலவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Ruwan Wijewardane (1) Ruwan Wijewardane (2)Rohan (2) Rohan