செய்திகள்

வன்னி வேட்பாளர் விவகாரம்: ஈபிஆர்எல்எப் கட்சிக்குள் கருத்து மோதல்

வடமாகாண சபை உறுப்பினர் சிவமோகனை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஈபிஆர்எல்எப் கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எப் கட்சி சார்பாக வன்னி தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில் வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கு சிலவேளைகளில் பாதிப்பாக அமையலாம். எனவே சிவமோகன் கட்சிக்கு புதிதாக வந்தவர் எனவும் அவருக்கு மாகாண சபையில் பணியாற்ற நிறைய காலம் உள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு ஆசனத்தை வழங்காது வேறு ஒருவருக்கு வழங்குமாறு கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் சிவசக்தி ஆனந்தன் அவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.