செய்திகள்

வன்முறை மோசமாகும் இடங்களில் மீள வாக்களிப்பு: தேர்தல் ஆணையாளர்

தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அவ்வாறு வன்முறை தொடரும் இடங்களில் மீளவும் வாக்களிப்பை நடத்தவேண்டியிருக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

இன்றைய தினம் செய்தியாளர் மாநாட்டை அவசரமாக கூட்டிய அவர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்துவரும் தற்போதைய நிலைமை வன்முறைகள் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாட்டையே காட்டுவதாகவும் இதனால் தான் பெரிதும் கவலை அடைந்திருப்பதாகவும் கூறினார்.

இராணுவம் எந்த ஒரு தேர்தல் கடமைகளிலும் ஈடுபடாது என்று நம்புவதாகவும் , பொலிசார் மட்டுமே வாக்களிப்பு நிலையங்களில் சீருடை மற்றும் ஆயுதங்களுடன் கடமை புரிவர் என்றும் தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் இதற்கான முழு ஒத்துழைப்பினை வழங்குவதற்கு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.