செய்திகள்

வயோதிபர் ஆயுததாரிகளால் அடித்து கொலை: ஏழாலையில் பதற்றம்

ஏழாலை மத்தி பகுதியில் வசித்து வந்த பேரம்பலம் செல்வரத்தினம் எனும் வயோதிபர் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் வந்த சில ஆயுத தாரிகளால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகள் பலனளிக்காததால் இரு தினங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.

குறித்த வயோதிபர் ஒரு விவசாயி ஆவார். அண்மையில் இறந்த தமது மனைவியின் நினைவுகளை விட்டு பிரிய மனம் இல்லாத அவர் தனது வீட்டிலேயே தனியாக வசித்து வந்தார். எவருடனும் சொந்த பகை எதுவும் இல்லாத அவர் அடித்து கொலை செய்யப்பட்டது ஊர் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது மகன் தற்பொழுது லண்டனில் வசித்து வருகின்ற செல்வரட்னம் திருக்குமார்  விடுதலை புலிகள் இயங்கிய காலத்தில் அவர்களுடன்  இணைந்து பணியாற்றியவர் என்பதும் இவர் தொடர்ந்தும் இலங்கை அரசிற்கு  எதிராக லண்டனில் செயற்படுவதனாலே தாக்கப்பட்டார் எனபதும் குறிப்பிட தக்கது. அண்மைய காலமாக முன்னாள் போராளிகள் மற்றும் உறவினர்கள் இவ்வாறு கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.