செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக அரசியல் தலையீடுன்றி வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனம்! கல்வி இராஜாங்க அமைச்சர் (படங்கள்)

பெருந்தோட்ட ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்ட வரலாற்றில் முதன்முறையாக அரசியல் தலையீடுகள் இன்றி வழங்கப்பட்ட நியமனமாக இருந்தால் அது இன்று வழங்கப்படுகின்ற ஆசிரியர் உதவியாளர்கள் நியமனமாகவே இருக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (08.05.2015) கொழும்பில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது 1688 பேருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.சச்சிதாநந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

இன்று இந்த நியமனம் 1688 பேருக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. எதிர்வரும் 29 ஆம் திகதி இன்னும் 1333 பேருக்கான நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நியமனம் உடனடியாக கிடைத்த ஒன்று அல்ல.

இதற்காக நான் எனது அமைச்சு பதவியையும் துறக்கவும் தயாராக இருந்தேன். எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் கிடைக்காவிட்டால் அதற்காக நான் என்றும் போராடத் தயங்க மாட்டேன்.

இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் மலையக கல்வியில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். அவர் என்றும் மலையக மக்களின் கல்விக்காக முழு அர்ப்பணிப்புடன் பங்களிப்பை செலுத்தி வருகின்றார்.

மலையக மக்கள் எங்கிருந்தாலும் கௌரவமான தொழில் பெற்று வாழ வேண்டும் எனபது எமது எதிர்பார்ப்பாகும். எனவே எதிர்காலத்தில் இந்த பயனத்தில் நல்ல ஒரு நிலை ஏற்பட வேண்டும் என நான் செயல்பட்டு வருகின்றேன்.

ஒரு சில அரசியல்வாதிகள் அறிக்கைகளை விட்டு கொண்டு இதனை பெற்றுக் கொடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள். நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். நான் அறிக்கை விடுபவன் அல்ல. வேலை செய்து முடித்து அதனை பயனை பெற்றுக் கொடுக்க என்னை அர்ப்பணித்து சேவை செய்பவன் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_0129

IMG_0099

IMG_0095

IMG_0086

IMG_0077

IMG_0015

IMG_0068