செய்திகள்

வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இது தொடர்பான வாக்களிப்பு டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.

-(3)