செய்திகள்

வரிவரி வரிசையில் வரிசை வரிசையில்

வரிசைகள் பலவிதம்
வரிவரி வரிசைகள் பலவேகம்
பிறப்பிற்கும் வரிசை
இறப்பிற்கும் வரிசை
இடையில் பற்பல வரிசைகள்
நடையில் வரிசைகள் பற்பல

வரியில் வரிசைகள் பற்பல
வரிசையில் வரிகள் பற்பல
ஆடம்பர சீர் வரிசைகள் பற்பல
வாழ்த்திற்கு வரிசைகள் பற்பல
உணவு அருந்துவதற்கு மங்கல வரிசை
சடங்குகள் பல ஆடம்பர வரிசையில்

அவலம் அவலையின் வரிசை
அரிசிக்கு ஓர் வரிசை
பாணுக்கு ஓர் வரிசை
நிவாரணத்திற்கு ஓர் வரிசை
பங்கீட்டிற்கு ஓர் வரிசை
சாலையில் இன்று வரிசைகள் பற்பல

எம்மினம் கடந்த இன்னல்கள் பலவரிசைகள்
சுற்றிவளைப்பில் பல வரிசைகள்
வன்சிறையில் பல வரிசைகள்
காட்டிக்கொடுப்பில் பல வரிசைகள்
இடம் பெயர்வில் பல வரிசைகள்
இடுகாட்டில் மேல் கீழ் வரிசைகள்

வரிசையில் இன இன்னல்கள் வரிசையில்
எறிகணைகள் வரிசையில் வீழ்ந்தனவே
குண்டுகள் வரிசையில் அழித்தனவே
உறவுகள் வரிசையில் அழித்தனவே
துறவுகள் வரிசையில் எதிர்த்தனவே
பொய்கள் வரிசைகள் பொழிந்தனரே

இன்றும் இனிதுற்றோர் பிணியுற்றால் வரிசையிலே
வைத்தியத்திற்கு வரிசை வரியில்
மருத்துவத்திற்கு வரிசை வரியில்
அறுவைக்கு வரிசை வரியில்
மீள் பார்வைக்கு வரிசை வரியில்
மனித நேயத்திற்கு வரிசை வசையில்

தேர்தல் வரிசைகள் பற்பல அங்கு
வரிசையில் வாக்கு வேட்டை பற்பல
வரிசையில் வாக்களிப்பு ஜனநாயகம் – அங்கு
வரிசையில் வரிசைகள் பணநாயகம்
வரிசையில் வரிசைகள் பற்பல
வரியில் வரிசையில் வரிவரி வரிசையில்

பொருளுக்கு வரிசை ஈண்டு
எரிபொருளுக்கும் வரிசை ஈண்டு
எரிவாயுவுக்கும் வரிசை ஈண்டு
நீருக்கும் நீள் வரிசை உண்டு
வரிசையில் வாழ்கின்றோம் – இங்கு
வரிசையில் வீழ்கின்றோம் வலுவிழந்து

வரிசைக்கு நாம் இடும் வரிசை முடிவில் கண்டீர்
வரியில் வரிசையில் பற்பல கண்டீர்
வரி இல் வரிசைகள் பற்பல கண்டீர்
எரியில் வரிசைகள் பற்பல கண்டீர்
வரிசையில் எரிகள் பற்பல கண்டிPர்
வரிசைக்கு வரிகை அற்றிடும் காலம் கனிந்திடும்

வரிசையில் பல வரிசைகள் கண்டோம் – ஆனால்
வரிசையில் வரிசைக்கு வரிசை உண்டோ
திசையில் வரிசைகள் பல திக்கில் இன்று
விசையில் பொருள் ஈட்டம் ஏதுவம் ஏது
நிதிக்கு வரிசை இங்கு நீண்டு வரிசையில் நீதியை கண்டிலோம்
வரிசையில் இறைவனை கண்டிடின் நல்குவான் – எமக்கு

வரிசையில் அறம் செய்
வரிசையில் பயிர் செய் உரம் இட்டே
வரிசையிலேதரிசுக்களைசீர்செய்
வரிசையில் கப்பலை எதிர்பாராதே
வரிசையில் பகிர்ந்துன்டு வாழ்
வரிசையில் அபகரிக்காதே பட்டினிப்பேரிடரில்

வரிசையில் மேன்மை தா இறைவா
வரிசையில் சுபீட்சம் தா இறைவா
வரிசையில் மீட்சி தா இறைவா
வரிசையில் அபயம் தா இறைவா
நல வரிசை சீர் வரிசை வரிசை வரிசையில்
வரிசையில் வரிசைகளே எம் ஆத்ம ஏக்கம்

– மருத்துவர் சி.யமுனானந்தா