செய்திகள்

வருட இறுதியில் ஒபாமா இலங்கை வருவார்

இந்த வருட இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வருட இறுதிக்குள் இங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.  இதற்கு முன்னர் இந்திய பிரதமர் மற்றும் அமெரிக்க இராஜங்க செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இங்கு வந்தனர். தற்போதைய அரசாங்கத்தின்  சிறந்த வெளியுறவு கொள்கையே இவர்களின் விஜயத்திற்கு காராணமாகும். என கிரியெல்ல தெரிவித்துள்ளார்.