வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு யாழில் நிதி சேகரிப்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஆலய திருப்பணி சபையினர் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிதி சேகரிப்பிலும்,பொருள் சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஆலய திருப்பணிச் சபைத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்தத் தெய்வீகப் பணிகள் கடந்த வாரம் யாழ்.மாவட்டத்தில் முழுவீச்சில் இடம்பெற்றது.குறிப்பாக யாழ்.நகர்,அதனை அண்டிய பிரதேசங்கள்,யாழ்.பலாலி வீதி ,வலி.தெற்கு,வலி.வடக்கு எனப் பல பகுதிகளிலுமுள்ள வீடுகள்,வர்த்தக நிலையங்களில் ஆலய திருப்பணி சபையினர் நிதி சேகரிப்பிலும்,பொருள் சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் அம்பாள் திருப்பணிக்கு உதவினர்.
கடந்த வருடமும் யாழ்.குடாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ஆலய திருப்பணி சபையினர் இவ்வாறான திருப்பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.நகர் நிருபர்-