செய்திகள்

வலிகாமத்தில் ஆயிரம் ஏக்கர் 3 வாரத்தில் விடுவிப்பு: டி.எம்.

வலிகாமம் வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச் சொந்தக்காரர்களிடம் கையளிக்க மூன்று கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில், வட மாகாண ஆளுனர் செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர் இந்த விடயத்தினைக் கூறியுள்ளார்.