செய்திகள்

வலிகாமத்தில் கடும் மழை காரணமாக சிறுபோக வெங்காயச் செய்கை பாதிப்பு

யாழ்.வலிகாமம் பிரதேசத்தில் அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக சிறு போக வெங்காயச் செய்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வலி.தெற்கு,வலி.வடக்கு,வலி.கிழக்குப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வெங்காயப் பயிர்களே அழிவடைந்துள்ளன.கடும் மழை காரணமாக வெங்காயப் பாத்திகளில் நீர் தேங்கி நின்றமையினாலேயே வெங்காயப் பயிர்கள் அழுகி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பெருமளவு முதலீட்டில் வெங்காயச் செய்கை செய்த தாம் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள் மழை காரணமாகப் பாதிக்கப்பட்ட தமக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-

Onion Cultivation (2) Onion Cultivation (3)