செய்திகள்

வலிகாமத்தில் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்: மக்கள் சீற்றம்

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்களுடைய வீடுகளை இராணுவத்தினர் கண்மூடித்தனமாக இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

வறுத்தலைவிளான் மற்றும் பளை வீமன்காமப் பகுதிகளில் இருந்த வீடுகளே அண்மையில் இவ்வாறு இராணுவத்தினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு இராணுவத்தினர் உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து இரண்டாம் கட்டமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் வறுத்தலைவிளான் மற்றும் பளை வீமன்காமம் பகுதி கிராமசேவையாளர் பிரிவுகளும் பகுதியளவில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை இனங்காண்பதற்கு மக்கள் அங்கு சென்றிருந்தனர்.  இதன் போது தமது வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளமையினைக் கண்டு கண்ணீவடித்துக் கொண்டதுடன், இராணுவத்தினரையும் திட்டித்தீர்திருந்தனர்.

தாம் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லும் போது கட்டி மடீக்கப்படடிருந்த வீடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் என்றார் புதிதாக இடிக்கப்பட்டமைக்கும், விடுகள் இடிக்கப்பட்டு பல ஆண்டு காலம் சென்றால் எவ்வாறு இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளாத அளவிற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

நாங்கள் எங்களுடைய வீடுகளை கண்டுபிடித்து குடியேறிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்துடனே இவ்வாறான கண்மூடித்தனமாக செயற்பாடுகளை இராணுவ்ததினர் மேற்கொண்டுள்ளனர்.

இடிக்கப்பட்ட எங்களுடைய வீடுகளுக்குள் இராணுவத்தினர் முகாங்கள் அமைத்திருந்துள்ளனர். அவர்கள் அடுக்கிவைத்திருந்த மண் மூடைகள் அப்படியே இருக்க வீடுகளில் சுவர்கள் மட்டும் எவ்வாறு உடைந்திருக்கும்.

இராணுவத்தினர் வேனுமென்றே எங்களுடைய வீடுகளை உடைத்துள்ளனர் என்றும் உடைக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் மனமுருகியுள்ளனர்.